3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் தொடர் விடுமுறை!! மதுபானப்பிரியர்கள் அதிர்ச்சி!!

 
டாஸ்மாக் விடுமுறை

சங்க காலத்தில் கொடையில் சிறந்த கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னன் நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் கொல்லிமலையை ஆட்சி செய்ததாக வரலாறு குறிப்பிடுகிறது. வில் வித்தையில் சிறந்த விளங்கிய ஓரி மன்னனின் வீரம், கொடைத்தன்மை குறித்து சங்ககால தமிழ் இலக்கியங்களான எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு நூல்களில் ஏராளமான பாடல்கள்  இடம்பெற்றுள்ளன.

வல்வில் ஓரி
 
ஈகையின் மறு உருவமுமான, கொல்லிமலையை ஆண்ட வல்வில்  ஓரி மன்னனின் புகழை பறைசாற்றும் வகையில், கடந்த 1975-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு சார்பில் வல்வில் ஓரி விழா 2 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, 2023-ம் ஆண்டு விழா ஆகஸ்டு மாதம் 2 மற்றும் 3-ம் தேதிகளில் நடக்கிறது. இந்த நிலையில், இந்த விழாவை முன்னிட்டு வரும் 3-ம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உமா உத்தரவிட்டுள்ளார்.

உள்ளூர் விடுமுறை

இந்நிலையில், இந்த விழாவில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் ஆகஸ்ட் 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில், கொல்லிமலையில் உள்ள செம்மேடு, செங்கரை மற்றும் சோளக்காடு ஆகிய பகுதிகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் உமா உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்த நாட்களில் டாஸ்மாக் கடைகள் பார்கள் திறக்கப்பட்டிருந்தாலோ  அல்லது மறைமுகமாக விற்பனை செய்வது தெரிய வந்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web