தவெக உள்கட்சி மோதல்: 3 பேர் மருத்துவமனையில் அனுமதி!
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு பேனர் வைப்பதில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளிடையே எழுந்த உள்கட்சி மோதல் காரணமாகக் கலவரச் சூழல் உருவாகியுள்ளது.
கோயில் திருவிழாவிற்காக வைக்கப்பட்ட விளம்பரப் பேனரில் தன் படம் இடம்பெறவில்லை என்ற காரணத்தால் தகராறு தொடங்கியுள்ளது. மாவட்ட இணைச் செயலாளர் சிலம்பரசன் தலைமையிலான கும்பல் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக மீஞ்சூர் நகரச் செயலாளர் சரண்ராஜ் குற்றம்சாட்டியுள்ளார். இந்தத் தாக்குதலில் காயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காகப் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து காயமடைந்தவர்களைச் சந்திக்கப் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு வந்த தவெக சட்டமன்ற உறுப்பினர் ரவியை, பாதிக்கப்பட்ட தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் முற்றுகையிட்டனர். அவரிடம் நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.
