3 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்! ELCOT MD கார்த்திகேயனுக்கு புதிய பொறுப்பு

 
ஐஏஎஸ்

 

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, தமிழ்நாடு எல்காட் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக (MD) பணியாற்றி வந்த கே.பி. கார்த்திகேயன், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பேரூராட்சிகள் இயக்குநர் பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பேரூராட்சிகள் இயக்குநரகத்தில் ஓராண்டு காலத்திற்கு தற்காலிகமாக உருவாக்கப்பட்டுள்ள புதிய பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவி, சமூக நலத்துறை இயக்குநர் பதவிக்கு இணையான தகுதியைக் கொண்டதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐஏஎஸ் ஐபிஎஸ் ஆலோசனை சட்டம் ஒழுங்கு

இதற்கு முன்பு பேரூராட்சிகள் இயக்குநராக பணியாற்றி வந்த பிரியங்கா, தற்போது தமிழ்நாடு மின்னணு ஆளுமை முகமையின் (TNeGA) இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். மேலும், அந்த அமைப்பின் முதன்மைச் செயல் அதிகாரி (CEO) பொறுப்பையும் கூடுதலாக அவர் கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வெளிநாட்டு அயல் பணியை முடித்துக் கொண்டு தமிழக அரசுப் பணிக்கு திரும்பியுள்ள பி. விஷ்ணு சந்திரன், கே.பி. கார்த்திகேயனுக்குப் பதிலாக தமிழ்நாடு எல்காட் நிறுவனத்தின் புதிய மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐஏஎஸ்

விஷ்ணு சந்திரனுக்கான அயல் பணி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தனியாக பின்பற்றப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் பேரூராட்சிகள் இயக்குநர், தமிழ்நாடு மின்னணு ஆளுமை முகமை இயக்குநர் மற்றும் எல்காட் நிறுவன மேலாண் இயக்குநர் ஆகிய முக்கிய பொறுப்புகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த புதிய பணியிட மாற்ற உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.