ஆம்புலன்ஸ் - கார் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் பலி - மதுரை திருமங்கலம் அருகே சோகம்!

 
ஆம்புலன்ஸ் விபத்து

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஆம்புலன்ஸும் காரும் நேருக்கு நேர் மோதியதில், 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சொக்கநாதன்பட்டி விளக்கு பகுதியில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. சாலையில் வந்த காரும், நோயாளியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளாகின.

விபத்து மரணம் கொலை  தற்கொலை

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒருவரும், ஆம்புலன்ஸில் நோயாளியுடன் உடன் வந்தவர் மற்றும் மற்றொருவர் என மொத்தம் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசலும், பரப்பரப்பான சூழலும் நிலவியது. காவல்துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.