திருச்சி சமயபுரம் அருகே கார் - ஆம்னி பேருந்து மோதி விபத்து - 3 பேர் ஸ்பாட்லேயே பலி!

 
திருச்சி விபத்து

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது ஆம்னி பேருந்து மோதி ஏற்பட்ட கோர விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திருச்சி சமயபுரம் அருகே சென்று கொண்டிருந்த கார் மீது எதிரே வந்த ஆம்னி பேருந்து பலமாக மோதியதில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.

விபத்து மரணம் கொலை  தற்கொலை

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காரில் இருந்த 7 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்துக் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், காயமடைந்த 7 பேரையும் உடனடியாக மீட்டுச் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய ஆம்னி பேருந்தின் ஓட்டுநரைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து காரணமாகச் சிறிது நேரம் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்திப் போக்குவரத்தைச் சீரமைத்தனர்.