கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி!! பலர் படுகாயம்!! பெரும் சோகம்!!

 
ராஜஸ்தான்

ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் பிரசித்தி பெற கட்டு ஷ்யாமிஜி கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் பங்குனி மாத்ததில் வரும் சுக்லபட்சத்தில் திருவிழா நடத்தப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு மாதமும் வரும் ஏகாதசி அன்று திருவிழா நடைபெறுவது வழக்கம். கட்டு ஷியாம்ஜி கோவில் சிக்கார் மாவட்டத்தில் மிகவும் பிரபலமான புனிதத்தலம். இடர் நீங்க இக்கோவிலில் பிரார்த்தனை செய்தால் தீர்வு கிட்டும் என பக்தர்கள் நம்புகின்றனர்.

ராஜஸ்தான்

இதில் பங்கேற்க இன்று ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் 3 பேர் மூச்சு திணறி உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

ராஜஸ்தான்

இந்த சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில் கூறியதாவது, பருவமழை காலத்தில் இந்தக் கோயிலில் பல்வேறு திருவிழாக்களும் நடைபெறுவது வழக்கம். கொரோனா தளர்வு அறிவிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் திருவிழா என்பதால் இந்த ஆண்டு இத்திருவிழா பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதனால் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதன் காரணமாக இந்த விபத்து நடந்துள்ளது. இப்போது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று தெரிவித்துள்ளது. ஷ்யாம்ஜி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web