துருக்கியில் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி!
துருக்கி நாட்டின் இஸ்தான்புல் மாகாணத்தில் உள்ள பணப் பரிமாற்ற அலுவலகத்தில் ஏற்பட்ட தகராாரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பா இடையே அமைந்துள்ள துருக்கி நாட்டின் இஸ்தான்புல் மாகாணம் பைதா மாவட்டத்தில் அந்நிய செலவாணி பரிமாற்ற அலுவலகம் (கரன்சி எக்ஸ்சேஞ்ச்) இயங்கி வருகிறது.
இந்த அலுவலகத்தில் வெளிநாட்டுப் பணத்தை உள்நாட்டுப் பணமாக மாற்ற வந்த வாடிக்கையாளருக்கும், அலுவலக ஊழியருக்கும் இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலின் போது எதிர்பாராத விதமாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இந்தத் துப்பாக்கிச் சூடு எதற்காக நடத்தப்பட்டது என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
