பிரான்சிடம் இருந்து மேலும் 3 ரபேல் விமானங்கள் இந்தியா வந்தன

 
பிரான்சிடம் இருந்து மேலும் 3 ரபேல் விமானங்கள் இந்தியா வந்தன

இந்தியாவில் ராணுவ வலிமையையும், பாதுகாப்பையும் அதிகரிக்கச் செய்யும் பொருட்டு இந்தியா பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் பிரான்ஸிடம் இருந்து ரூ.59,000 கோடி மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ய அந்நாட்டு அரசுடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. அந்த ஒப்பந்தம் கையொப்பமாகி சுமார் 4 ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு ஜூலை 29 ஆம் தேதி முதல் தொகுப்பாக 5 ரபேல் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன.

பிரான்சிடம் இருந்து மேலும் 3 ரபேல் விமானங்கள் இந்தியா வந்தன

அதன் பின்னர் கடந்த ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி இரண்டாவது தொகுப்பாக 3 ரபேல் விமானங்களும், கடந்த ஜனவரி 27 ஆம் தேதி மூன்றாவது தொகுப்பாக 3 ரபேல் விமானங்களும் இந்தியா வந்து சேர்ந்தன.

பிரான்சிடம் இருந்து மேலும் 3 ரபேல் விமானங்கள் இந்தியா வந்தன

அதைத்தொடர்ந்து நான்காவது தொகுப்பாக மார்ச் மாதம் மேலும் 3 ரபேல் விமானங்கள் இந்தியா வந்துள்ளன. இதன்மூலம் இதுவரை இந்தியா வந்து சேர்ந்துள்ள ரபேல் விமானங்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

இது தவிர, மேலும் 7 ரபேல் விமானங்கள் ஏப்ரல் மாதத்துக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன இதன்மூலம் இதுவரை இந்தியா வந்து சேர்ந்துள்ள ரபேல் விமானங்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது 7-வது முறையாக, 3 ரபேல் போர் விமானங்கள், பிரான்சில் இருந்து நேற்று (ஜூலை 21) இந்தியா வந்து சேர்ந்தன. அவை 8 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை இடையில் நிற்காமல் கடந்து இந்தியா வந்து சேர்ந்தன. விமானங்கள் இடைவிடாமல் பறந்துவந்தபோது அரபு எமிரேட்சில் நடுவானில் எரிபொருளை நிரப்பிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ள ரபேல் விமானங்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்தது.

From around the web