3 நாட்களில் 3 கொலைகள் - மதுரையில் அடுத்தடுத்த சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம்!
மதுரையில் நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டுத் திரும்பிய இளைஞர் ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கொலை வழக்கில் ஆஜராகிவிட்டு வீட்டிற்குத் திரும்பிய இளைஞரை, 4 பேர் கொண்ட மர்மக் கும்பல் வழிமறித்து ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்துள்ளது.

இக்கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்டுத் தப்பியோடிய 4 பேர் கொண்ட கும்பலைப் பிடிக்கக் காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரையில் கடந்த 3 நாட்களில் மட்டும் அடுத்தடுத்து 3 கொலைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. தொடர்ச்சியாக நடைபெறும் கொலைச் சம்பவங்களால் மதுரை மக்கள் மற்றும் வணிகர்களிடையே கடும் பீதியும் அச்சமும் நிலவி வருகிறது. இச்சம்பவங்கள் தொடர்பாகக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
