அடுக்குமாடி குடியிருப்புகளில் பழைய செருப்புகளை திருட்டு.. சந்தையில் விற்ற 3 பேர் கைது !!

 
seruppu

அடுக்குமாடி குடியிருப்புகளில் செருப்புகளை திருடி வாரச்சந்தையில் விற்பனை செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். 

சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள வீடுகளின் வெளியே விடப்பட்டிருந்த ஏராளமான காலணிகள் அடுத்தடுத்து காணாமல்போயின. அக்கம்பக்கத்தினர் அனைவரும் தங்கள் வீடுகளில் செருப்பு காணாமல்போனது குறித்து பேசி அதிர்ச்சி அடைந்தனர். 

இதனால் சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளர் குடியிருப்பு பகுதிகளில் பொருத்தபட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தப்போது, ஒருவர் படிக்கட்டுகளில் தவிழ்ந்து வந்து காலணிகளை திருடி சென்றிருப்பது பதிவாகியிருந்தது. அடுத்தடுத்த வீடுகளுக்கு சென்று, வீடுகளின் வெளியே கழற்றி போடப்பட்டிருந்த செருப்புகளை அந்நபர் திருடிச்சென்றார்.

seruppu

இதையடுத்து, குடியிருப்புவாசிகள் சார்பில் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அடுத்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை தேடி வந்தனர். இந்த புகாரில் கேம்ப்ரோடு பகுதியில் உள்ள கேக் கடையில் வேலை பார்த்து வரும் வடமாநிலத்தை சேர்ந்த விகாஸ் குமார், ரோஹித் குமார் ஆகியோரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது.

seruppu

அப்போது, அடுக்குமாடி குடியிருப்புகளை நோட்டமிட்டு, வீடுகளின் வெளியே கழற்றி போடப்பட்டிருந்த செருப்புகளை திருடி பல்லாவரம் வாரச்சந்தையில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அருள் எப்ரின் என்பவர் காலணி திருட்டுக்கு உடந்தையாக இருநதது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார்,  அவர்களிடமிருந்து விற்பனைக்கு வைத்திருந்த 300 ஜோடி காலனிகளை பறிமுதல் செய்தனர். பிறகு தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

From around the web