கோவை ஆனைமலை பகுதியில் 3 பள்ளி மாணவர்கள் திடீர் மாயம் - காட்டு யானைகள் நடமாட்டத்தால் அச்சம்!
கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டியுள்ள கூமாட்டி மற்றும் நாகரூத் பகுதிகளைச் சேர்ந்த 3 பள்ளி மாணவர்கள் திடீரென மாயமாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி நேரம் முடிந்த பிறகு, பள்ளிக்கு பின்புறம் உள்ள நீர் நிலைப் பகுதிக்குக் குளிக்கச் சென்ற 3 மாணவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை எனப் பள்ளி ஆசிரியர்கள் தகவளித்துள்ளனர். மாணவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் காணாமல் போனது தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவர்கள் மாயமான ஆனைமலை வனப்பகுதியில் தற்போது காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, காவல்துறையினரும் வனத்துறையினரும் இணைந்து அடர்ந்த வனப்பகுதியில் மாணவர்களைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
