3 அரசு பேருந்துகளை சிறைப்பிடித்த மாணவ, மாணவிகள்!!

 
பேருந்து சிறை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்து ஒன்று நிற்காமல் சென்று விட்டது.இதனால் மாணவர்கள்   3 பேருந்துகளை  சிறை பிடித்து, மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.   சூளகிரி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகளில் சூளகிரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வசித்து வரும் 5000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.  

பேருந்து சிறை

இதில் பலபேர் தினசரி பேருந்துகளில் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.  வழக்கம் போல் நேற்றும் செம்பரசனப்பள்ளி வழியாக, சூளகிரிக்கு அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது.
 அந்த பேருந்து ஓட்டுனர் செம்பரசனப்பள்ளி  ஸ்டாப்பில்,பஸ்சை நிறுத்தவில்லை. இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருந்த பள்ளி மாணவர்கள், ஓடிச் சென்று அந்த பஸ்சை சிறைபிடித்தனர்.அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் கிராம மக்கள் பேருந்தை ஏன்   நிறுத்தவில்லை என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவ்வழியாக சூளகிரிக்கு சென்ற மேலும் 2 அரசு டவுன் பஸ்களையும் சிறைபிடித்தனர்.  

பேருந்து சிறை


இதுகுறித்து தகவல் அறிந்ததும்  போக்குவரத்து கோட்ட மேலாளர்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, ஸ்டாப்பில் முறையாக பேருந்துகள்  நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்படும்   என உறுதியளித்தனர். இதன் பிறகு மாணவர்கள் மற்றும் மக்கள், கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!