நீட் தேர்வு பயிற்சி பெற்ற 3 மாணவர்கள் தற்கொலை!! தொடரும் அவலம்!!

 
தற்கொலை

நீட் தேர்வுக்கு பயிற்ச்சி பெற்று வந்த 3 மாணவர்கள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துக் கொண்ட அதிர்ச்சி சம்பவம் ராஜஸ்தானில் அரங்கேறியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் நீட் உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுக்கு பயிற்சி  அளிக்கும் தனியார் மையங்கள் நூற்றுக்கணக்கில் இயங்கி வருகின்றன. நாடெங்கும் இருந்து ஏராளமான மாணவர்கள் கோட்டா நகரில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.

நீட் தேர்வு தற்கொலை

இங்குள்ள தனியார் பயிற்சி மையத்தில் பீகாரை சேர்ந்த அங்குஷ் வயது 16, உஜ்வால் வயது 17, மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரணவ் வயது 18 என்ற 3 மாணவர்கள்  பயிற்சி பெற்று வந்தனர். அங்குஷ் பொறியியல் கல்லூரி நுழைவுத்தேர்வுக்கும், உஜ்வால் மற்றும் பிரணவ் நீட் தேர்வுக்கும் தயாராகி கொண்டிருந்தனர். கடந்த சில நாட்களாகவே மன அழுத்தத்தில் இருந்த இவர்கள் இந்த மூன்று பேரும்  தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  கடந்த சில ஆண்டுகளாகவே கோட்டாவில் உள்ள மையங்களில் பயிற்சி பெறும் மாணவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று சிறந்த கல்லூரிகளில் சேர வேண்டும் என்று பயிற்சி மையத்தின் சார்பில் மாணவர்களுக்கு தீவிர அழுத்தம் தரப்படுவதுதான் என்று கூறப்படுகிறது.   

தாய் மற்றும் 2 குழந்தைகள் தற்கொலை

மாணவர்கள் தற்கொலைக்கான காரணம் குறித்து கடிதம் எதையும் எழுதி வைத்திருக்கவில்லை.   கடந்த மாத இறுதியில் கோடாவில் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். 2018-ம் ஆண்டில் மட்டும் கோடாவில் 18 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2017-ம் ஆண்டு 7 பேரும், 2016-ம் ஆண்டு 17 பேரும் தற்கொலை செய்துள்ளனர். 2016-ம் ஆண்டு அனைத்து கோச்சிங் கிளாஸ்களையும் மூடவேண்டும் என்று சத்தம் போட்டு கத்திவிட்டு மாணவி ஒருவர் கோச்சிங் கிளாஸ் கட்டடத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து இக்கோச்சிங் கிளாஸ்களை ஒழுங்குபடுத்த சட்டமசோதா உருவாக்கப்படும் என்று கடந்த 2019-ம் ஆண்டு மாநில அரசு அறிவித்தது. ஆனால் இது வரை அது பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. நீர் தேர்வு மையங்களால் தொடரும் இதுப்போன்ற அவலத்தை தடுக்க அம்மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

From around the web