வீடு புகுந்து தந்தை மற்றும் 2 மகன்களை வெட்டிய 3 தவெக நிர்வாகிகள் - ஒருவர் உயிரிழப்பு!

 
தவெக

சென்னை நொளம்பூர் பகுதியில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான வன்முறைச் சம்பவம் ஒட்டுமொத்தப் பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை நொளம்பூரில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த கும்பல் ஒன்று, அங்கு வசித்து வந்த தந்தை மற்றும் அவரது இரண்டு மகன்களைக் கத்தியால் கொடூரமாக வெட்டியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர், தாக்குதலில் ஈடுபட்ட முக்கியப் புள்ளிகள் மூன்று பேரைக் கைது செய்துள்ளனர்.

பள்ளி மாணவி தற்கொலை!! கல்லூரி மாணவர் கைது.!!

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக், சூர்யா மற்றும் ராக்கி ஆகிய மூவரும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களின் அரசியல் பின்னணி மற்றும் தாக்குதலுக்கான அசல் காரணம் குறித்து நொளம்பூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தக் கொடூரமான ஆயுதத் தாக்குதலின் விளைவாக அந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். தாக்குதலின் போது ஏற்பட்ட  வெட்டுக்காயங்கள் காரணமாக, முருகதாஸின் மகனான சஞ்சய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அரிவாள் வெட்டு வன்முறை க்ரைம்

படுகாயமடைந்த மற்றொரு மகன் சரத்குமார் மற்றும் தந்தை முருகதாஸ் ஆகிய இருவரும் மீட்கப்பட்டு, அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தலைநக சென்னை புறநகர்ப் பகுதியில், அதுவும் மக்கள் நடமாட்டம் உள்ள குடியிருப்புப் பகுதியில் வீடு புகுந்து தவெக நிர்வாகிகள் நடத்தியுள்ள இந்தத் துணிகரக் கொலைச் சம்பவம் நொளம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்பொழுது பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அசம்பாவிதங்களைத் தவிர்க்க அப்பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.