OLD MONK உள்ளிட்ட 3 ரம் வகைகளுக்கு நாடு முழுவதும் தடை.. மதுபிரியர்களுக்கு ஷாக்
பிரபல மதுபான பிராண்டான ஓல்ட் மாங்க் தயாரிப்பில் உள்ள 3 குறிப்பிட்ட வகை ரம்களுக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு ஆணையம் நாடு முழுவதும் தடை விதித்துள்ளது. இந்த அறிவிப்பு மதுபிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓல்ட் மாங்க் தயாரிப்புகளில் செயற்கைச் சுவையூட்டிகள் பயன்படுத்தப்படுவதாகவும், உணவுப் பாதுகாப்பு மற்றும் லேபிளிங் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும் FSSAI கண்டறிந்துள்ளது.

இந்த ரம் தயாரிப்பில் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே பக்குவப்பட்ட ரம் ஸ்பிரிட் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், பாட்டில்களில் '7 ஆண்டுகள் பழமையான கலவை' எனத் தவறான லேபிள் ஒட்டப்பட்டு நுகர்வோர் ஏமாற்றப்படுவதாக FSSAI தெரிவித்துள்ளது.
ஓல்ட் மாங்க் தி லெஜண்ட், ஓல்ட் மாங்க் கோல்ட் ரிசர்வ், ஓல்ட் மாங்க் XXX மெச்சூர்டு ஆகிய 3 குறிப்பிட்ட தயாரிப்புகளையும் உடனடியாகச் சந்தையில் இருந்து திரும்பப் பெறவும், விற்பனையை நிறுத்தவும் உணவுப் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
