கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி - ஓசூர் டாடா தொழிற்சாலையில் விபரீதம்!

 
ஓசூர் கிருஷ்ணகிரி  மருத்துவமனை அவசர சிகிச்சை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் கழிவுநீர் சுத்திகரிப்புத் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஓசூர் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல டாடா செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பலர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிற்சாலை வளாகத்தில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்புத் தொட்டியை சுத்தம் செய்யும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஓசூர் கிருஷ்ணகிரி  மருத்துவமனை அவசர சிகிச்சை

தொட்டிக்குள் இறங்கிச் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, அங்கு ஏற்பட்ட நச்சு விஷவாயு தாக்கியதில் தொழிலாளர்கள் மூவரும் திடீரென மயங்கிச் சரிந்தனர். தொட்டியில் தொழிலாளர்கள் மயங்கி விழுந்ததைக் கண்ட சக ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் உடனடியாக அவர்களை மீட்டுச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு விரைந்தனர். எனினும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சாரதி குமார், அக்மல்பாபு பாய் மற்றும் காவிரி ஆகிய மூன்று தொழிலாளர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மூன்று தொழிலாளர்களின் உடல்களும் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காகக் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பள்ளி மானவி தற்கொலை

தொழிற்சாலைகளில் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் முறையான வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்தும், இந்த விபத்துக்கான முழுக் காரணம் குறித்தும் ஓசூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.