ஒரு நிமிடத்தில் 55 கார்ட்வீல்கள்: 3 வயது சீனச் சிறுவன் கின்னஸ் சாதனை... வைரல் வீடியோ!

 
கின்னஸ்

 

சீனாவைச் சேர்ந்த 3 வயது குங்பூ சிறுவன், ஒரு நிமிடத்தில் 55 முறை கார்ட்வீல் சாகசம் செய்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளான். 16 வயதுக்குட்பட்டோர் பிரிவில் இந்த அசத்தலான சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள அன்யாங் நகரின் டாங்யின் கவுண்டி பகுதியைச் சேர்ந்த பெங் யிஜோவ் என்ற சிறுவனை, குடும்பத்தினர் அன்புடன் ஜௌஜௌ என அழைக்கின்றனர். இவரது பெற்றோர் தற்காப்புக் கலைப் பயிற்சியாளர்களாகவும், பயிற்சி மையம் நடத்துபவர்களாகவும் உள்ளனர்.

Watch China's 3-year-old kung fu prodigy set a Guinness World Record with cartwheels | South China Morning Post

ஆறு மாதக் குழந்தையாக இருந்ததிலிருந்தே குங்பூ பயிற்சி மையச் சூழலில் வளர்ந்து வந்த இச்சிறுவன், இரண்டு வயதில் தானாகவே கார்ட்வீல் செய்ய முயற்சிக்கத் தொடங்கியுள்ளான். பெற்றோர் நடத்தி வரும் பயிற்சி மைதானத்தில் நிகழ்த்தப்பட்ட இந்தச் சாதனை, கின்னஸ் உலக சாதனை தினத்தை முன்னிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது