பயங்கரம்!! சிலிண்டர் வெடித்ததில் 30 பேர் படுகாயம்!! 10 பேர் கவலைக்கிடம்!!

 
தீவிபத்து

பீகார் மாநிலத்தில் அவுரங்காபாத் மாவட்டத்தில் ஷாகஞ்ச் பகுதியில் வசித்து வருபவர் அனில் கோஸ்வாமி. இன்று காலை இவரது வீட்டில் சத் பூஜை நடக்க இருந்தது. இதனால் இவரும் இவருடைய உறவினர்கள், நண்பர்கள் இந்த பூஜையில் கலந்து கொள்ள இருந்ததால் அவர்களுக்கான ஏற்பாடுகள் நேற்று முதலே நடைபெற்று வந்தது. கூலிக்கு ஆட்கள் மூலம் சமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  

தீவிபத்து

அதன்படி அதிகாலை 2.30 மணியளவில் சமையல் தொழிலாளர்கள் உணவு சமைத்து கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதனால் அந்த இடம் முழுவதும் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. அந்த இடத்தில் இருந்தவர்கள் அலறி கூச்சலிட்டனர். சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தில் வசித்தவர்கள் உடனடியாக  தீ விபத்து குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து சென்று சமையல் கூடத்தில் பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.


இந்த முயற்சியில் 7 போலீசார் உட்பட 30க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது. அதே நேரத்தில் பணியில் ஈடுபட்டிருந்த மற்ற தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் காயமடைந்தவர்களை பத்திரமாக மீட்டு அவுரங்காபாத் சதார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். இதில்  10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!