நெகிழ்ச்சி... சபரிமலையில் 30 ஆண்டுகளாக பாதுகாப்பு பணியில் போலீஸ் அதிகாரி!

 
சபரிமலை

 

சபரிமலை அய்யப்பன் கோயில் மண்டல மற்றும் மகரவிளக்கு சீசன் காலங்களில் கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் போலீஸ் அதிகாரி ஹரிபிரசாத், ஐயப்ப பக்தர்களுக்கு நன்கு பரிச்சயமான முகமாகத் திகழ்கிறார். கேரள மாநிலம் கண்ணூர் அஞ்சரக்கண்டியைச் சேர்ந்த 56 வயதான இவர், 1993-ம் ஆண்டு கேரள காவல்துறையில் சேர்ந்து தற்போது ஆயுதப்படை 4-ம் படை பிரிவில் உதவி கமாண்டராகப் பணியாற்றி வருகிறார்.

சபரிமலை

சன்னிதானம், 18-ம் படி, மாளிகப்புரம், மரக்கூட்டம், பம்பை மற்றும் நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் சீசன் காலங்களில் பக்தர்களுக்குச் சேவையாற்றி வருகிறார். தரிசன சீசன் அல்லாத மற்ற நாட்களில் மாநிலம் முழுவதும் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை நடத்தி, மனரீதியாகப் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகளை மீட்டெடுத்துள்ளார்.

சபரிமலை

ஜனாதிபதியின் போலீஸ் பதக்கம், முதல்வரின் போலீஸ் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளைப் பெற்றிருந்தாலும், பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தரிசனம் முடித்துத் திரும்புவதே மிகப்பெரிய திருப்தி என அவர் தெரிவித்துள்ளார்