பயங்கர தாக்குதலில் ஈடுபட்ட இஸ்ரேல்.. 31 பேர் பரிதாப பலி..!

 
இஸ்ரேல் - காசா

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி முதல் ஹமாஸ் திடீரென இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 250 பேர் போர்க் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் விடுவிக்கப்பட்ட நிலையில், 130 பேர் ஹமாஸின் கைகளில் உள்ளனர். எனினும் அவர்களில் 30 பேர் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

Palestinians killed in Israeli airstrikes in Rafah as Netanyahu signals  pending invasion | CBC News

இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. ஹமாஸ் முற்றிலுமாக ஒழிக்கப்படும் வரை ஓயப்போவதில்லை என இஸ்ரேல் அரசு அறிவித்து, தாக்குதல் தொடர்ந்து நடத்தி வருகிறது. மேலும், பயங்கரவாதிகளை தேடும் பணியை தீவிரப்படுத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார். கடந்த நான்கு மாதங்களாக ஹமாஸுக்கு எதிரான போர் நடந்து வருகிறது. காசாவின் 2.3 மில்லியன் மக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இஸ்ரேலிய இராணுவ ஆக்கிரமிப்பினால் எகிப்திய எல்லையை ஒட்டிய பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

Israeli airstrikes kill 31 Palestinians in Rafah

இந்நிலையில் நேற்று ரபா நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 31 பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனர். அவர்களில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள். பாலஸ்தீனப் பகுதிகளை விட்டு வெளியேற முடியாமல், முகாம்களில், ஐ.நா. அவர்கள் நிர்வகிக்கப்பட்ட தங்குமிடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிகின்றன. காசா சுகாதாரத் துறையின் கூற்றுப்படி, இந்த போரில் 27,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இறந்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

.

From around the web