தமிழ்நாடு முழுவதும் 31,005 ரவுடிகளிடம் தீவிர சோதனை - 1,155 பேர் கைது!
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரின் உத்தரவின்படி, மாநிலம் முழுவதும் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்ட தீவிரப் பிடிவாரண்ட் மற்றும் ரவுடிகள் தணிக்கை நடவடிக்கையில் 1,155 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜூலை 15 முதல் ஜூலை 21 வரை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துக் காவல் மாவட்டங்களிலும் இந்த அதிரடிச் சோதனை மற்றும் தணிக்கை நடத்தப்பட்டது.

குற்றப் பின்னணி கொண்ட 31,005 ரவுடிகள் மற்றும் பழைய குற்றவாளிகளின் இருப்பிடங்களுக்கு நேரடியாகச் சென்று காவல்துறையினர் தீவிரத் தணிக்கை மேற்கொண்டனர். 1,155 பேர் கைது: இதில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 1,155 குற்றவாளிகள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நீண்ட நாட்களாகப் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளைக் பிடிக்க எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கைகளின் பலனாக, நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட 2,906 பிணையில் வர முடியாத பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஜாமீனில் வெளிவந்துள்ள ரவுடிகள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டாலோ அல்லது ஜாமீன் நிபந்தனைகளை மீறினாலோ, அவர்களின் ஜாமீனை உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்குக் காவல்துறைத் தலைமை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
