32 அடி அத்தி விநாயகர்!! களைகட்டத் தொடங்கும் விநாயகர் சதுர்த்தி!!

 
விநாயகர்

ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று விநாயக சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தமிகத்தில் ஊரெங்கும் பந்தல்கள் அமைக்கப்பட்டு தற்காலிகமாக மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நிறுவி பூஜைகள் செய்யப்படுகின்றன. பின்னர் விநாயகர் சிலையை 3வது நாள், 5வது நாள் ஊரின் அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். 

அந்த வகையில் இந்தாண்டு வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி விநாயக சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு நாட்டிலேயே முதன்முதலாக, நாகையில் அத்தி மரத்தில், 32 அடி உயர விநாயகர் சிலை செய்யப்பட்டுள்ளது.நாகையில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 32 அடி உயர விஸ்வரூப விநாயகர் சிலை வீதியுலா நடத்தப்படுவது வழக்கம். விநாயகர் வீதிஉலா துவக்கப்பட்டு, 35 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு, அத்தி மரத்திலான விஸ்வரூப விநாயகர் சிலை செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, விஸ்வரூப விநாயகர் குழு சார்பில், 1 கோடி ரூபாய் செலவில் அத்தி மரத்தில் விநாயகர் சிலை செய்யப்பட்டு உள்ளது. திருவாரூர் மாவட்டம், ஆண்டிப்பந்தலைச் சேர்ந்த திருநாவுக்கரசு ஸ்தபதி தலைமையில், 15 பேர் கொண்ட குழுவினர், 8 மாதங்களாக பணியாற்றி இந்த சிலையை உருவாக்கி உள்ளனர். மொத்தம் 16 டன் எடையுடைய அத்தி மரத்திலான விநாயகர் சிலை, 32 அடி உயரத்திலும், 18 அடி அகலத்திலும் உள்ளது.

இந்த சிலை நேற்று பொதுமக்கள் பார்வைக்காக உலா வந்தது. நாகையில் உள்ள நீலாயதாட்சி அம்மன் கோவில் வாசலில் இருந்து புறப்பட்டு, நான்கு வீதிகளில் வலம் வந்த வெள்ளோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web