அதிர்ச்சி... ஒரு மாதத்தில் 34 பேர் மரணம்... கேரளத்தை கலவரமாக்கும் எலிக் காய்ச்சல் பரவல்! பாதுகாப்பு வழிமுறைகள் இது தான்!
கேரள மக்களிடையே எலி காய்ச்சல் பரவல் கலவரப்படுத்தி பதற்றத்தை உருவாக்கி வருகிறது. கடந்த ஒரு மாத காலத்தில் கேரளத்தில் 34 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இவற்றில் பெரும்பாலும் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரிழப்புகள் என்பது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் இந்த மாதத்தில் மட்டுமே இதுவரை தொற்று நோய்களால் 34 பேர் உயிரிழந்துள்ளனர். எலிக்காய்ச்சல், டெங்கு, ஹெபடைடிஸ், மூளைக்காய்ச்சல் மற்றும் ஸ்க்ரப் டைபஸ் போன்றவற்றால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்த மாதத்தில் 2,045 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 402 பேர் எலிக் காய்ச்சலாலும், 1,295 பேருக்கு ஹெபடைட்டிஸாலும், 62 பேர் ஸ்க்ரப் டைபஸாலும், 1,027 பேர் சின்னம்மையாலும், 15,731 பேர் தண்ணீரால் பரவும் நோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 16 பேரும், டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர். ஹெபடைட்டிஸால் 6 பேரும், மூளைக்காய்ச்சலின் அறிகுறிகளுடன் 3 பேரும், ஸ்க்ரப் டைபஸால் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
எலிக்காய்ச்சல் மற்றும் டெங்கு அதிக ஆபத்தானவை. எலிக்காய்ச்சலுக்கு ஆரம்பத்தில் இருந்தே உரிய சிகிச்சை அளிக்கப்படாததே எலிக்காய்ச்சல் உயிரிழப்புக்குக் காரணம். அசுத்தமான நீரில் மூழ்கி குளித்து விட்டு, டாக்ஸிசைக்ளின் மாத்திரை சாப்பிடாதவர்களே உயிரிழப்பதாக சுகாதாரத் துறை கண்டறிந்துள்ளது.
கேரளத்தில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கொசுக்களின் மூல அழிவை முறைப்படுத்தினால் டெங்குவை ஓரளவு தவிர்க்கலாம். தண்ணீர் தேங்கும் சூழ்நிலையையும் தவிர்க்க வேண்டும்.எலிக்காய்ச்சல்: பாதுகாப்பாக இருங்கள்

கழிவுநீரில் இறங்குபவர்கள் எலிக்காய்ச்சல் தடுப்பு மாத்திரை சாப்பிட வேண்டும். காலில் காயம் உள்ளவர்கள் உள்ளிட்டவர்கள் அழுக்கு நீரில் இறங்கினால் வைரஸ் விரைவில் உடலை அடையும்.
எலிக்காய்ச்சல் மரணங்கள் காய்ச்சலை சிறுமைப்படுத்தி சுய சிகிச்சையால் ஏற்படுகிறது
மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுகவும். மருத்துவரின் அறிவுறுத்தல்களின்படி பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
