10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளுக்கு 35 அதிகாரிகள் நியமனம்... தமிழக அரசு திடீர் உத்தரவு!

தமிழகத்தில் 2024-25ம் ஆண்டிற்கான 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நடப்பாண்டுக்கான 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பை பள்ளிகல்வித்துறை வெளியிட்டது. அதன்படி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28ம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ம் தேதி முடிகிறது. இதையடுத்து பொதுத்தேர்வுக்கான முடிவுகள் மே 19ம் தேதி வெளியிடப்படுகிறது. அதற்கு முன்னதாக 10ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 22ம் தேதி தொடங்கி 28ம் தேதி முடிவடைகிறது.
அதேபோல் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 5ம் தேதி தொடங்கி மார்ச் 27ம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து பொதுத்தேர்வுக்கான முடிவுகள் 10ம் வகுப்பு வெளியிடப்படும் அதே நாளில் அதாவது மே 19ம் தேதி வெளியிடப்படுகிறது. அதற்கு முன்னதாக 11ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி பிப்ரவரி 21ம் தேதி முடிவடைகிறது.
குறிப்பாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி 25ம் தேதி நிறைவடைகிறது. பொதுத்தேர்வுக்கான முடிவுகள் மே 9ம் தேதி வெளியிடப்படுகிறது. அதற்கு முன்னதாக 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 7ம் தேதி தொடங்கி பிப்ரவரி 14ம் தேதி முடிவடைகிறது. இதற்கான தேர்வு முடிவுகள் மே 9ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 10,11, 12ம் வகுப்புகளுக்கு விரைவில் பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில் தேர்வுப் பணிகளை கவனிக்க 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், பள்ளிக்கல்வித் துறையின் மூத்த இயக்குநர்கள் உட்பட 35 அதிகாரிகளை நியமித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!