கனரா வங்கியில் 3,500 அப்ரண்டிஸ் பணியிடங்கள்... தமிழகத்தில் 391 இடங்கள் - மாதந்தோறும் ரூ.16,650 உதவித்தொகை!

 
கனரா

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில் காலியாக உள்ள 3,500 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 391 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இப்பயிற்சிப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும், சம்மந்தப்பட்ட உள்ளூர் மொழி பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது வரையானது 20 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு வங்கி

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்குப் பயிற்சி காலத்தின்போது மாதம் 16,650 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும். தகுதியான நபர்களைத் கல்வித் தகுதி மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வங்கி நிர்வாகம் தேர்வு செய்யவுள்ளது.

அதிர்ச்சி!! நாடு முழுவதும் 2 நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்!! இந்த வாரம் 3 நாட்கள்  வங்கிகள் செயல்படாது!!

இப்பணிக்கு விண்ணப்பிக்க எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் எதுவும் கிடையாது. இதர பிரிவினருக்கு 500 ரூபாய் விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வமான nats.education.gov.in என்ற இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம்.