கள்ளச்சாராயம் குடித்து 37 பேர் பலி.... துருக்கியில் அதிர்ச்சி!
துருக்கியில் நவம்பர் முதல் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் நவம்பர் 1ம் தேதி முதல் கள்ளச்சாராயம் குடித்து துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் 37 பேர் உயிரிழந்து இருப்பதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கையில் அந்நாட்டு அரசு இறங்கியுள்ளது.
அதன்படி, கடந்த 10 நாட்களில் கள்ளச்சாராயம் விற்றதாக 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 40000 லிட்டர் கள்ளச்சாராயம் அழிக்கப்பட்டு இருப்பதாக துருக்கி அரசு தெரிவித்துள்ளது.
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!