இலங்கை சிறையிலிருந்து தமிழக மீனவர்கள் 37 பேர் விடுதலை!

 
அதிர்ச்சி!! தமிழர்களை  சிறை பிடித்த இலங்கை அரசு!! கொந்தளிக்கும் மீனவர்கள்!!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 37 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

சர்வதேச எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாக அவ்வப்போது தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், அவர்களிடம் இருந்து படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இது குறித்து மாநில அரசும், மத்திய அரசும் நிரந்தர தீர்வு காண இத்தனை வருடங்களில் எந்தவிதமான நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்கிற வருத்தமும், புகாரும் தமிழக மீனவர்களிடையே இருந்து வருகிறது. 

மீனவர்கள் கைது

இந்நிலையில், இலங்கை கடற்படையினர் கைது செய்திருந்த தமிழக மீனவர்கள் 37 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

அதிர்ச்சி!! தமிழர்களை  சிறை பிடித்த இலங்கை அரசு!! கொந்தளிக்கும் மீனவர்கள்!!

தமிழகத்தில் நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 37 மீனவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் 21ம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.