ட்விட்டரிலிருந்து 3700 பேர் பணிநீக்கம்?! கலங்கி துடிக்கும் ஊழியர்கள்!!

 
எலான் மஸ்க்

தகவல் பரிமாற்ற செயலிகளில் முண்ணனியில் இருந்து வருவதும் கோடிக்கணக்கான பயனர்களை பெற்றிருப்பது ட்விட்டர். இந்நிறுவனத்தினை சமீபத்தில் உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் கைப்பற்றியுள்ளார்.  எலான் மஸ்க் டுவிட்டர் உரிமையாளரான பிறகு பல  அதிரடி நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக  டுவிட்டரில் பாதி வேலைகளை குறைக்க மஸ்க் திட்டமிட்டுள்ளார்.

எலான் மஸ்க்

இதற்காக  எலான் மஸ்க் கிட்டத்தட்ட 3700 பேரை பணியில் இருந்து நீக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ஊழியர்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு இந்த வார இறுதிக்குள் தகவல் தெரிவிக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. எலான் மஸ்க் இது குறித்த செய்திகளை முதலில் மறுத்து வந்தார். டுவிட்டர் பயனாளர் எரிக் உமான்ஸ்கி பணிநீக்கங்கள் பற்றி கேட்டதற்கு, "இது தவறானது." என எலான்  மஸ்க் பதிலளித்தார். ஆனால்  அதே நேரத்தில் ட்விட்டரின் உயர் நிர்வாகிகள் மற்றும் கிட்டத்தட்ட முழு குழுவும் நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

எலான் மஸ்க்

முன்னாள் டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் மற்றும் சட்ட மற்றும் கொள்கைத் தலைவர் விஜயா காடே ஆகியோர் கடந்த வாரம்  நீக்கப்பட்டவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள். இவர்கள் இருவரும் தங்கள் டுவிட்டர் சுயவிவரங்களில் இருந்து "டுவிட்டரில் பணிபுரிவதை" நீக்கியுள்ளனர். அத்துடன் வீட்டிலிருந்தபடியே வேலை என்ற நிலையை மாற்றி அலுவலகத்திற்கு நேரடியாக வந்து பணிபுரியவும் அறிவுறுத்துவார் எனவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web