தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு 371 எம்.பி.க்கள் ஆதரவு: திமுக, பவார் கட்சி நிலைப்பாடு!
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு 371 எம்.பி.க்கள் ஆதரவு அளிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மசோதா மூலம் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 815 வரை அதிகரிக்கப்பட உள்ளதுடன், 2051-ம் ஆண்டு வரை மாநிலங்களுக்கு இடையிலான தொகுதிப் பங்கீடு மாற்றப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கவும் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதாக திமுக அறிவித்ததைத் தொடர்ந்து, கனிமொழி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன் உள்ளிட்ட திமுக எம்.பி.க்கள் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து ஆதரவு நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளனர்.
சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் ஆதரவு அளிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. மசோதா நிறைவேற 360 வாக்குகள் தேவைப்படும் நிலையில், 371 எம்.பி.க்களின் ஆதரவு கிடைக்க வாய்ப்புள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
