இந்தியன் ரயில்வேயில் 3,996 காலி பணியிடங்கள் - RRB அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

 
இந்தியன் ரயில்வே வேலைவாய்ப்பு ரயில்

இந்திய ரயில்வேயில் ஜூனியர் இன்ஜினியர் உட்படப் பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக ரயில்வே தேர்வு வாரியம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மொத்தம் 3,996 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜூனியர் இன்ஜினியர் மற்றும் இதர தொடர்புடைய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ அல்லது பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும். 18 முதல் 33 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் (அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு).

ரயில் தண்டவாளம் ரயில்வே பராமரிப்பு

தேர்வாகும் நபர்களுக்கு ஆரம்ப கட்டமாகப் பிரிவு லெவல்-6 அடிப்படையில் ₹35,400 மாதச் சம்பளமாக வழங்கப்படும். கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் செப்டம்பர் 13, 2026-க்குள் ரயில்வே தேர்வு வாரியத்தின் (RRB) அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.