அதிர்ச்சி!! திருப்பதி மலைப்பாதையில் 3 வது சிறுத்தை பிடிபட்டது!!

 
சிறுத்தை

திருப்பதி ஏழுமலையான் கோவில் உலகப்பிரசித்தி பெற்றது. ஏழுமலையான தரிசிக்க அடிவாரத்திலிருந்து நடைபாதையாக நடந்து செல்லும் வழி ஒன்றும் உள்ளது. இங்கு வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம். குறிப்பாக சிறுத்தை நடைபாதையாக செல்லும் பக்தர்களை அவ்வப்போது இழுத்துசென்று விடுகிறது. அந்த வகையில் கடந்த 50 நாட்களில் 3 சிறுத்தைகள்பிடிபட்டுள்ளன. இதற்காக  மலைப்பாதையில், சிறுத்தையைப் பிடிப்பதற்காக வனத்துறையினரால் கூண்டுகள்  வைக்கப்பட்டுள்ளன.  

சிறுத்தை

ஆகஸ்ட்11ம் தேதி நெல்லூர் 6 வயது லட்ஷிதா என்ற சிறுமி மலைப்பாதையில் தனது பெற்றோருடன் சென்று கொண்டிருந்த போது சிறுத்தை அவரை இழுத்து சென்று விட்டது. இதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து திருப்பதி மலைப்பாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அத்துடன் வனத்துறையினருடன் இணைந்து  தேவஸ்தான நிர்வாகம், சிறுத்தையை பிடிக்க பல்வேறு இடங்களில் கூண்டுகளை வைத்தது.

சிறுத்தை


அதன்படி கடந்த 3 நாட்களுக்கு முன்பு லட்சுமி நரசிம்ம சன்னதி அருகே வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிறுத்தை ஒன்று சிக்கியது. தற்போது அதே பகுதிக்கு அருகே வைத்திருந்த கூண்டில் மற்றொரு சிறுத்தையும் சிக்கியது. கடந்த 50 நாட்களில் 3 சிறுத்தைகள் பிடிபட்டுள்ளன. இதில் முதலில் பிடிபட்ட சிறுத்தை மட்டும் பாக்ராபேட்டை வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது.
2வதாக  சிக்கிய சிறுத்தை தான் சிறுமியை கொன்று இருக்கலாம் என கருதப்படுகிறது. அதனுடைய  ரத்தம், நகம், முடி ஆகியவை  மரபணு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையில் மனித மாமிசம் சாப்பிட்டதற்கான தடயம் இருந்தால் அந்த சிறுத்தையை  வன விலங்குகள் அருங்காட்சியகத்தில் வைக்கவும்  முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 3 வதாக சிக்கிய சிறுத்தைக்கும் மரபணு சோதனை நடத்தப்படும் என  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web