3வது டி20.. இன்று இந்தியா - நியூசிலாந்து மோதல்!

 
நியூசிலாந்து

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. வெலிங்டன் நகரில் உள்ள ஹென்றி ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று மதியம் 12:30 மணிக்குத் தொடங்குகிறது

டி20

சோனி ஸ்போர்ட்ஸ் மற்றும் சோனி லிவ் செயலியில் போட்டியை கண்டு களிக்கலாம். இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணியும், தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்யும் தீவிரத்துடன் நியூசிலாந்து அணியும் களமிறங்க உள்ளன.