அமெரிக்காவில் 3 வயது சிறுமி கின்னஸ் சாதனை!
அமெரிக்காவைச் சேர்ந்த 3 வயது சிறுமி ஒருவர் தனது தந்தையுடன் இணைந்து 'ஹூலா ஹூப்' விளையாட்டில் புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்து அசத்தியுள்ளார்.
அமெரிக்காவின் இடாகோ மாகாணத்தைச் சேர்ந்த பிரபல கின்னஸ் சாதனையாளர் டேவிட் ரஷ், தனது 3 வயது மகள் பெலிசிட்டியுடன் இணைந்து இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

தந்தை டேவிட் ரஷ் சுழற்றி வீசும் ஹூலா ஹூப் வளையத்திற்குள், சிறுமி பெலிசிட்டி மிகத் துல்லியமாகப் பாய்ந்து குதிக்கும் சவாலில் இருவரும் ஈடுபட்டனர். இதற்கு முன்பு இந்த விளையாட்டில் 8 முறை வளையத்திற்குள் குதித்ததே சாதனையாக இருந்தது. அதனை முறியடித்த இந்தத் தந்தை-மகள் ஜோடி, வெறும் 30 விநாடிகளில் 9 முறை மிகத் துல்லியமாக வளையத்திற்குள் புகுந்து தாண்டி புதிய சாதனையைப் படைத்துள்ளது.
ஏற்கனவே டேவிட்டின் மூத்த மகன்கள் பல்வேறு சாதனைகளைச் செய்துள்ள நிலையில், தற்போது 3 வயது பெலிசிட்டியும் கின்னஸ் சான்றிதழைப் பெற்றுள்ளதன் மூலம், டேவிட்டின் மூன்று குழந்தைகளும் உலக சாதனையாளர்களாக மாறியுள்ளனர்.
