ஆந்திராவில் ரயில் மோதி +2 மாணவர்கள் 4 பேர் பலி: ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி!

 
ரயில் தண்டவாளம் தற்கொலை

ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ராஜ்யராணி எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் பிளஸ்-2 பயின்று வந்த நான்கு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டம், டெக்கலி மண்டலத்திலுள்ள ரவிவலசா (ராயவலசா) அருகே நவ்படாவில் இருந்து டெக்கலியை நோக்கி ராஜ்யராணி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்றுகொண்டும், அதைக் கடக்க முயன்று கொண்டும் இருந்த +2 மாணவர்கள் 5 பேர் மீது எதிர்பாராதவிதமாக அந்த விரைவு ரயில் மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் விசாகர்ராவ், சரத், திலீப் மற்றும் சிவா  ஆகிய நான்கு மாணவர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தண்டவாளம்

மேலும், இடிபாடுகளில் சிக்கி ராஜா என்ற மற்றொரு மாணவர் பலடுகாயமடைந்தார். உடனடியாகக் காவல்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த மாணவனை மீட்டு டெக்கலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், ரயில்வே காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.