இளம்பெண்ணுக்கு போதைப்பொருள் கொடுத்துப் பாலியல் வன்கொடுமை - 4 பேர் கைது!

 
பாலியல் பலாத்காரம் வன்கொடுமை சிறுமி

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் இளம்பெண் ஒருவருக்கு மது மற்றும் போதைப் பொருட்களைக் கொடுத்து, மிரட்டித் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் உறவினர் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பாலியல் பலாத்காரம் இளம்பெண்

கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த பெண்ணை, அவரது உறவினர் உள்படச் சிலர் பல்வேறு தங்கும் விடுதிகள் மற்றும் வீடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு மது மற்றும் போதைப்பொருட்களைக் கொடுத்து மயங்கச் செய்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் செயல்களைத் தங்களது செல்போன்களில் படம்பிடித்து வைத்துக் கொண்ட குற்றவாளிகள், அதனை வைத்து அந்தப் பெண்ணுக்குத் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். இதனால் கடும் மனவேதனை அடைந்த பெண்ணும் பயத்தின் காரணமாக யாரிடமும் தெரிவிக்காமல் இருந்துள்ளார்.

நாளுக்கு நாள் தொல்லை அதிகரித்ததைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் பெரம்பரை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி, வெள்ளியூரைச் சேர்ந்த ஜாசிப் (39), ஜாகீர் உசேன் (49), ராஜீஷ் (40), அபிலாஷ் (46) ஆகிய 4 பேரைக் கைது செய்தனர்.

பாலியல் பலாத்காரம் சிறுமி

கைதானவர்களில் ஒருவரான ராஜீஷ், முன்னதாக 'கப்பா' சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டவர் என்பதும், தனது தந்தையைத் தாக்கி விலா எலும்பை உடைத்தவர் மீது ஏற்கனவே வழக்குள்ளதும் குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தில் மேலும் பலருக்குத் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.