ஒரே பிரசவத்தில் 4 பெண் குழந்தைகள்... நிதியுதவி கோரி ஆஸ்திரேலியக் குடும்பம் தவிப்பு!

 
ட்ரிப்லெட்ஸ் குவாட்டிரிப்லெட்ஸ் நான்கு குழந்தைகள் பிரசவம் குழந்தை

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தம்பதி ஒன்றிற்கு ஒரே பிரசவத்தில் 4 பெண் குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், தங்களின் பெரிய குடும்பப் பராமரிப்பு மற்றும் நிதி நெருக்கடியைச் சமாளிக்க அவர்கள் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். அந்தத் தம்பதிக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது மீண்டும் ஒரே பிரசவத்தில் 4 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.

ஒரே நேரத்தில் பிறந்த 4 குழந்தைகளையும் சேர்த்து, தற்போது அக்குடும்பத்தில் மொத்த குழந்தைகளின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. திடீரெனக் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை இரட்டிப்பானதால், அவர்களின் பராமரிப்பு, பால், டயபர் மற்றும் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் அக்குடும்பம் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.

குழந்தைகளின் பராமரிப்புச் செலவுகளுக்கு உதவுமாறு இணையவழி வாயிலாகப் பொதுமக்களிடம் அக்குடும்பத்தினர் நிதி திரட்டி வருகின்றனர். மேலும், 8 குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் அனைவரும் ஒன்றாகப் பாதுகாப்பாகப் பயணிக்க 10 பேர் அமரக்கூடிய பெரிய கார் ஒன்றை வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால், அதற்குத் தேவையான நிதியுதவியையும் வழங்கி ஆதரவளிக்குமாறு அவர்கள் நெகிழ்ச்சியுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.