இன்று அதிகாலை நடந்த என்கவுன்டரில் குற்றவாளிகள் 4 பேர் பலி!

 
encounter
 

உத்தரப் பிரதேச மாநிலத்தில் காவல் துறை சிறப்பு படையினர் (எஸ்.டி.எஃப்) நடத்திய என்கவுன்டரில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் 4 பேர் கொல்லப்பட்டதாக உத்தரப் பிரதேச மாநில காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி சூடு

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டம், ஜின்ஜானா பகுதியில் இன்று அதிகாலை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 'முஷ்தஃபா காகா' என்கிற கும்பலைச் சேர்ந்த குற்றவாளிகள் அர்ஷத்  மற்றும் அர்ஷத்தின் கூட்டாளிகள் மஞ்சீத், சதீஷ் உட்பட 4 பேர் என்கவுன்டரில் காயமடைந்த நிலையில், அவர்கள் அனைவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

உத்தரபிரதேச போலீஸ்

கொள்ளையன் அர்ஷத் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.1 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அர்ஷத்தை சுட்டுப்பிடிக்க போலீசார் முயன்றதில் இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் அர்ஷத் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சண்டையில், காவல் துறை ஆய்வாளர் சுனில் என்பவருக்கு துப்பாக்கிச்சூட்டில் காயம் ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web