தீபாவளிக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை... அரசு ஊழியர்கள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு!
நடப்பாண்டுக்கான தீபாவளிப் பண்டிகை வரும் நவம்பர் 8-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் இந்த வருடம் தீபாவளி பண்டிகைக்கு தொடர் விடுமுறை கிடைப்பது குறித்து மக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த ஆண்டுகளைப் போலன்றி, இந்த ஆண்டு தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருவதால் வழக்கமான 4 முதல் 5 நாட்கள் வரையிலான தொடர் விடுமுறை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு வெறும் 3 நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இருப்பினும், பண்டிகையைக் கொண்டாடும் விதமாக நவம்பர் 6ம் தேதி வெள்ளிக்கிழமை, நவம்பர் 7ம் தேதி சனிக்கிழமை, நவம்பர் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் நவம்பர் 9ம் தேதி திங்கள்கிழமை எனத் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்படவும் வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கட்கிழமையும் விடுமுறை தினமாக அறிவிப்பு வெளியாகும் என்று அரசு ஊழியர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர். இது குறித்துத் தமிழக அரசு தரப்பிலிருந்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
