4 நாட்கள் போக்குவரத்து மாற்றம் !! வாகன ஓட்டிகளே உஷார்!!

 
போக்குவரத்து மாற்றம்

ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியாவின்  76 வது சுதந்திர தின விழா  கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை  சென்னை கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்து உரை நிகழ்த்துவார். அத்துடன் காவல்துறை மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் அணிவகுப்புக்களை ஏற்றுக் கொள்வார். இதற்கான  ஒத்திகை நிகழ்ச்சிகள்  ஆகஸ்ட் 4 ,10, 13  தேதிகளில் நடைபெற உள்ளன.  

அணிவகுப்பு
சென்னையில் சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்வுக்காக 4ம் தேதி, 10 மற்றும்  13ம் தேதிகளில், காலை 6 மணி முதல் ஒத்திகை முடியும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நேப்பியர் பாலம் முதல்  போர் நினைவுச்சின்னம் வரையிலான சாலை, காமராஜர் சாலை, ராஜாஜி சாலை, கொடிமரச்சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்  

தேசியக்கொடி

இது குறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் “சென்னையில் சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்வுக்காக ஆகஸ்ட் 4ம் தேதி, 10ம் தேதி & 13ம் தேதிகளில், காலை 6 மணி முதல் ஒத்திகை முடியும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. இதன்படி  நேப்பியர் பாலம் - போர் நினைவுச்சின்னம் வரையிலான சாலை, காமராஜர் சாலை, ராஜாஜி சாலை, கொடிமரச்சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுகிறது என போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web