நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!!

 
விடுமுறை

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அரசு விடுமுறை மற்றும் பொதுவிடுமுறைகளை தவிர்த்து உள்ளூர் விடுமுறைகள் அளிக்கப்படுவதுண்டு. அந்த வகையில் உள்ளூரில் நடைபெறும் திருவிழாக்கள், பண்டிகைகளை கொண்டாடும் வகையில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.  இந்த விடுமுறையை மாவட்ட கலெக்டர் அவர்கள் அறிவிப்பார்கள்.

பள்ளிகளுக்கு விடுமுறை

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை அரசு விழாவாக கொண்டாடி வருகிறது. இதனை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்திற்கு நாளை ஆகஸ்ட் 3 ம் தேதி வியாழக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 12ம் தேதி வேலை நாளாக கடைபிடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில்  தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூர், சேலம் மாவட்டங்களிலும் நாளை ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை


இன்றும், நாளையும் நாமக்கல் மாவட்டத்தில் கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி விழா, அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக   நாளை நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  இதன் அடிப்படையில் நாளை  ஈரோடு, சேலம், திருப்பூர், நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களிலும் அனைத்து பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதே சமயத்தில் அவசிய தேவைகளுக்காக  முக்கிய அலுவலகங்கள், அரசு கருவூலங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web