குடையோடு கிளம்புங்க... இன்றும், நாளையும் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட்!

 
மஞ்சள்


 தமிழகத்தில் வடகிழக்குபருவமழை காலம் முடிவடைந்த நிலையில் இன்றும் நாளையும் தென் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி  மாவட்டங்களுக்கு வியாழன், வெள்ளிக்கிழமைகளில் கன மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மஞ்சள் அலர்ட்

அதன்படி  இலங்கை கடலில் இன்று ஜனவரி 30ம் தேதி வியாழக்கிழமை  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாக உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஜனவரி 30 முதல் பிப்ரவரி 1ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்  காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை மழை ரெட் ஆரஞ்சு மஞ்சள்

அதே நேரத்தில் ஜனவரி 30 மற்றும் 31ம் தேதிகளில்  தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சென்னையை பொறுத்தவரை சென்னை  மற்றும் புறநகா் பகுதிகளில் வியாழக்கிழமை காலை வேளையில் லேசான பனிமூட்டம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web