ஆம்னி பேருந்தில் இழுத்துச் செல்லப்பட்டு 4 பேர் படுகாயம்!

 
ஆம்னி பேருந்தில் இழுத்துச் செல்லப்பட்டு 4 பேர் படுகாயம்!



சென்னையில் இருந்து மதுரை செல்ல இருந்த ஆம்னி பேருந்தின் கூரையில் கயிறு ஒன்று இருந்தது. இந்தப் பேருந்து வால்டாக்ஸ் சாலை நிறுத்தத்தில் இருந்து வேப்பேரி ஈ.வி.கே.சம்பத் சாலை வழியாக சென்ற போது கயிறு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை கடந்து வந்தபோது, ஆம்னி பஸ்சில் தொங்கிய கயிறு பக்கவாட்டில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் மாட்டியது.

ஆம்னி பேருந்தில் இழுத்துச் செல்லப்பட்டு 4 பேர் படுகாயம்!

கயிற்றின் பிடியில் சிக்கிய மோட்டார் சைக்கிள் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு பின் விடுபட்டது. அதில் இருந்து கயிறு விடுபட்டு மற்றொரு மோட்டார் சைக்கிளை இழுத்ததில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிய 2 பேர் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.


3 வதாக காஞ்சீபுரத்தை சேர்ந்த ஜோதிராமலிங்கத்தின் மோட்டார் சைக்கிளில் மாட்டியதில் ஜோதிராமலிங்கம் படுகாயம் அடைந்தார். மேலும் ஈ.வி.கே.எஸ்.சம்பத் சாலை சந்திப்பில் போக்குவரத்து காவல்துறையினர் அமைத்திருந்த இரும்பு தடுப்பில் மாட்டியது. அங்கிருந்த போக்குவரத்து போலீசான ஆதிசேசனை இழுத்து கீழே தள்ளியது. இதனால் வேப்பேரியில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஆம்னி பேருந்தில் இழுத்துச் செல்லப்பட்டு 4 பேர் படுகாயம்!


ஒரே ஒரு கயிறு சரியாக கட்டப்படாததால் 3 மோட்டார் சைக்கிள்களில் சென்றவர்கள், போக்குவரத்து போலீஸ்காரர் என 4 பேரை படுகாயப் படுத்தியுள்ளது. இதுகுறித்து ஆம்னி பேருந்தின் ஓட்டுனர் 42 வயதான பரமேஸ்வரனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

From around the web