கோவையில் பெண் அடித்துக்கொலை - 10 நாட்களில் 4 பேர் பலியானதால் பதற்றம்!

 
கோவையில் பெண் அடித்துக் கொலை

கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் 58 வயது பெண் படுகாயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாப்பநாயக்கன்பாளையம் கருப்புக்கால் தோட்டத்தைச் சேர்ந்த சாந்தி (58) என்பவர், தனது வீட்டில் படுகாயங்களுடன் மர்மமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இக்கொலையைச் செய்த மர்ம நபர்கள் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி மானவி தற்கொலை

கடந்த சில நாட்களாகவே கோவையில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் தொடர் கொலைச் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் கடும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன. கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி நவீன் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் ஆகஸ்ட் 6ம் தேதி அஸ்வின் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். ஆகஸ்ட் 10ம் தேதி கல்லூரி மாணவர் அமுதன் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.

தற்போது சாந்தி என்ற பெண் அடித்துக் கொல்லப்பட்டதன் மூலம், கடந்த 10 நாட்களில் மட்டும் 4 பேரைக் பலிவாங்கிய தொடர் கொலையாளிகள் அல்லது கும்பல் பின்னணி குறித்துக் காவல்துறையினர் அனைத்துக் கோணங்களிலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.