கேஸ் கசிவால் தீப்பிடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி... பெரும் சோகம்!
தமிழகத்தின் தலைநகர் சென்னை கோவிலம்பாக்கம், காந்திநகர், 15-வது தெருவில் வசித்து வருபவர் முனுசாமி. இவர் மார்ச் 5 ம் தேதி இவரது குடும்பத்தினர் 5 பேருடன் வீட்டில் உறங்கி கொண்டிருருந்த போது கேஸ் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இரவு முழுவதும் கேஸ் கசிவு வீடு முழுவதும் பரவியது. இந்நிலையில், இதனை அறியாமல் 48 வயது ரகு என்பவர் மின்சார ஸ்விட்ச்சை ஆன் செய்து விட்டு வெளியில் சென்றனர். சிறிது நேரத்தில் அறை முழுவதும் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கி பயங்கர சத்தத்துடன் வெடித்ததாக கூறப்படுகிறது. இதில் வீட்டில் இருந்த முனுசாமி, ராணி(70), சாந்தி(45), ஹரிகுமார்(எ)அஜித்குமார்(27) 4 பேருக்கும் தீக்காயம் ஏற்பட்டு அலறி கத்தியுள்ளனர்.

அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று பின் மேல் சிகிச்சைக்காக கே.எம்.சி.அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்த பின்னர், தடயவியல் துறை உதவி இயக்குநர் ஜெயந்தி விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்து மாதிரிகளை சேகரித்து சென்றார். விபத்து நடந்த வீட்டில் மாதிரிகளை சேகரித்து, வீட்டில் இருந்து ரெகுலேட்டர் டியூப், மற்றும் பால் குண்டா, எரிந்த மாதிரி கண்ணாடி துண்டுகளை சேகரித்து எடுத்து சென்றார்.

இதன் விரிவான அறிக்கையை மேடவாக்கம் போலீசாரிடம் அளிக்கப்பட்டு அதன் பின் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட வீடு இருக்கும் இடத்தில் 5 வீடுகள் உள்ளது. காற்றோட்டம் இல்லாத அடைப்பாக இருப்பதால் அழுத்தம் காரணமாக வெடித்து இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் 40 சதவீத தீக்காயத்துடன் தீவிர சிகிச்சை பிரிவில் 4 பேரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அடுத்தடுத்து சாந்தி (45), ஹரிகுமார் (எ) அஜித்குமார் (27), முனுசாமி மூவரும் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தனர். முனுசாமியின் மனைவி ராணி (70) என்பவர் சிகிச்சை பெற்றுவந்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் தீவிபத்தில் அடுத்தடுத்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
