தமிழகமே அதிர்ச்சி... +2 மாணவியை அறையில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த 4 பேர் - விபரீதமான இன்ஸ்டா பழக்கம்!
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சேர்ந்த 17 வயது ப்ளஸ் 2 படித்து வந்த மாணவி ஒருவர்,கடந்த மாதம் திடீரென மாயமான நிலையில், தனது மகளைக் காணவில்லை என்று இது குறித்து மாணவியின் பெற்றோர் வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்நிலையில் காவல் நிலையத்தில் புகாரளித்து ஒரு வாரம் கழித்து, காணாமல் போன மாணவி, வீடு திரும்பினார்.
மாணவியிடம் பெற்றோர் தீவிர விசாரணை நடத்திய போது மாணவி கூறிய தகவல்களைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். இன்ஸ்டாகிராம் மூலம் மாணவியிடம் பழகி வந்த நண்பர் ஒருவர், தன்னிடம் ஆசை வார்த்தைகள் கூறி, தன்னை அழைத்து சென்று ஒரு அறையில் அடைத்து வைத்து மற்றொரு நண்பருடன் சேர்ந்து பலாத்காரம் செய்ததாக கூறி அதிர வைத்துள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், மாணவியையும் அழைத்துக் கொண்டு குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மாணவியிடம் போலீசார் விசாரித்ததில், மாணவி முழு நேரமும் இன்ஸ்டாகிராமில் மூழ்கி கிடந்த நிலையில் மாணவிக்கும் தடிக்காரன்கோணம் பகுதியைச் சேர்ந்த அஜன் (20) என்ற இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் இருவரும் இன்ஸ்டாகிராம் மூலமாக காதலித்து வந்துள்ளனர்.
அஜன் விரித்த காதல் வலையில் சிக்கிய மாணவி, அஜனுடன் பூங்கா, கடற்கரை என பல இடங்களுக்கு ஜோடியாக சுற்றியுள்ளார். இந்நிலையில் மாணவியிடம் ஆசை வார்த்தைக் கூறி, தனியே அழைத்துச் சென்று, விடுதியில் அறை எடுத்து மாணவியை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார். மாணவியுடன் உல்லாசமாக இருப்பதை வீடியோவாகவும் பதிவு செய்து கொண்ட அஜன், அதன் பின்னர் மாணவியின் ஆபாச வீடியோவைக் காட்டி மீண்டும் தன்னுடன் தனிமையில் வரும்படி மிரட்டியுள்ளார். இதற்கு மாணவி மறுத்ததால், ஆபாச வீடியோவை இன்ஸ்டா கிராமில் வெளியிட்டதாக தெரிகிறது.

இதனால் வேதனை அடைந்த மாணவி, தனது உறவு முறையான வேம்பனூரை சேர்ந்த விவேக் (32) என்பவரிடம் நடந்த சம்பவங்களை கூறி அழுதுள்ளார். மாணவியின் நிலைமையை அறிந்து கொண்ட விவேக், மாணவிக்கு உதவுவது போல் நடித்து, விவேக்கும், மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்ததுடன் இந்த விவரத்தை தனது நண்பரான பரப்புவிளையை சேர்ந்த தினேஷ் (29) என்பவரிடம் கூறியுள்ளார்.
உடனே மாணவியின் பலவீனத்தை உணர்ந்த தினேஷ், 'உனது பிரச்சினைகளை நான் தீர்த்து வைக்கிறேன். என்னு டன் வா' என மாணவியை அழைத்துள்ளார். இதனை நம்பிய மாணவி வீட்டில் இருந்து வெளியேறி தினேஷுடன் சென்றுள்ளார். தினேஷ் மாணவியை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு ஒன்றில் ஒரு வாரம் அடைத்து வைத்து, மாணவிக்கு மது வாங்கி கொடுத்து, குடிக்க வைத்து, போதையாக்கி மிரட்டி அடிக்கடி மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். அதன் பின்னர் தனது நண்பரான நாகர்கோவிலைச் சேர்ந்த ஆன்றோ ஜெரிஷ் (24) என்பவருக்கும் மாணவியை விருந்தாக்கி உள்ளார். ஒரு வாரம் அவர்களின் சித்ரவதையை அனுபவித்த மாணவி அங்கிருந்து தப்பி வீடு வந்து சேர்ந்ததாக கூறி கதறி அழுதுள்ளார். இதனையடுத்து மாணவியை போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக மாணவியின் காதலன் அஜன், விவேக், தினேஷ் மற்றும் ஆன்றோ ஜெரிஷ் ஆகியோர் மீது போக்சோ உட்பட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் 4 பேரையும் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
