அதிர்ச்சி... ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 14 மாத குழந்தை...விடிய விடிய தொடரும் மீட்பு பணிகள்!

கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில், 14 மாத குழந்தை ஒன்று ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த நிலையில், நேற்று மாலை முதல் விடிய விடிய மீட்பு பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று கொண்டிருக்கிறது. கர்நாடகா மாநிலம், லச்சயான் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது 14 மாத ஆண் குழந்தை சாத்விக், தங்களது வீட்டின் அருகே இருந்த நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, அந்த பகுதியில் இருந்த ஆழ்துளைக் கிணற்றினுள் நேற்று மாலை தவறி விழுந்தது.
Two-year-old boy accidentally falls into an open borewell at Lachayan village in Indi taluk of Vijayapura district in Karnataka
— Dilip Kumar (@dilipkumar_09) April 3, 2024
The toddler is identified as Sathwik Mujagonda.
Police and Fire & Emergency service personnel have launched a rescue operation. More details awaited pic.twitter.com/aBB2aaClW8
இது குறித்து உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்த நிலையில், நேற்று மாலை முதல் மீட்பு பணிகள் நடைப்பெற்று வருகின்றனர். ஆழ்துளை கிணற்றின் அருகிலேயே பொக்லைன் இயந்திரம் மூலமாக குழி தோண்டும் பணிகள் நடைப்பெற்று வருகிறது.
குழந்தையிடம் பெற்றோர்கள் பேச்சுக் கொடுத்து வருகின்றனர். ட்யூப் வழியாக ஆழ்துளை கிணற்றினுள் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. சுமார் 20 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியிருப்பதாக தெரிகிறது. குழந்தையின் உடலில் அசைவு இருப்பதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைப்பெற்று வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!