டாஸ்மாக் கடைகளில் தீபாவளிக்கு இளைஞர்களைக் கவர 4 புதிய வெளிமாநில பீர் ரகங்கள் அறிமுகம் - குஷியில் மது பிரியர்கள்!

 
பீர்

வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுத் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சுமார் 20 புதிய மதுபான வகைகளை அறிமுகம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக 4 புதிய வெளிமாநில பீர் ரகங்கள் விற்பனைக்கு வரவுள்ளன.

பீர் டாஸ்மாக்

மதுப்பிரியர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், பிர்ரா, ஹெய்னகென் சில்வர், சிம்பா ரோர் மற்றும் லோன் உல்ஃப் ஆகிய 4 பிரபல வெளிமாநில பீர் ரகங்கள் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்படுகின்றன. இந்தப் புதிய பீர் ரகங்கள் முதற்கட்டமாகத் தமிழகம் முழுவதிலும் உள்ள டாஸ்மாக் 'எலைட்' கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கவுள்ளன.

பீர்

புதிய பீர் ரகங்களின் ஆரம்ப விலை குறைந்தபட்சம் ரூ.250 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய 4 ரகங்களின் வருகையைத் தொடர்ந்து, டாஸ்மாக் கடைகளில் தற்போது புழக்கத்தில் உள்ள மொத்த பீர் ரகங்களின் எண்ணிக்கை 25-ஆக உயரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் டாஸ்மாக் விற்பனையை அதிகரிக்கவும், நுகர்வோருக்கு கூடுதல் ரகங்களை வழங்கவும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.