நீரோடை வாய்க்காலை சேதப்படுத்திய விவகாரம்.. 4 பேருக்கு அரிவாள் வெட்டு.. தீவிர விசாரணையில் போலீசார்..!

 
ஆத்தூர் சண்டை

ஆத்தூர் அருகே நீரோடை வாய்க்காலை சேதபடுத்தியது தொடர்பாக ஏற்பட்ட தகராறில்  நான்கு பேருக்கு அரிவாள் வெட்டு.. சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி போலீசார் விசாரணை.. 

சேலம் மாவட்டம்,  ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன், 60  இவருக்கு சொந்தமான ஒன்றை ஏக்கர் நிலம் அருகில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை, குத்தகை முறையில் முத்துசாமி குடும்பத்தினர் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் முத்துசாமி (65)  மற்றும் அவரது மகன் பூமாலை (35)  ஆகியோர், பொதுமக்கள் பயன்படுத்தும் அம்மம்பாளையம் சின்ன ஏரி நீரோடை பிரதான வாய்க்காலை சேதப்படுத்தியுள்ளதாக ௯றப்படுகிறது .

ஆத்தூர் அருகே டிராக்டர் நிலைதடுமாறியதில் இருவர் பலி | Two killed in tractor  overturn near Attur

இதுகுறித்து கணேசன் மற்றும் அவரது மனைவி தமிழ்ச்செல்வி உறவினர் தமிழ்வேந்தன் ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பூமாலை மற்றும் முத்துசாமி ஆகிய இருவரும் அரிவாள் மற்றும்  மம்மூட்டியால்  கணேசன் மற்றும் அவரது மனைவி தமிழ்ச்செல்வி உறவினர் தமிழ் வேந்தன் ஆகியோரை சரமாரியாக வெட்டினர்.

Attur, Salem : ஆத்தூர்: ஆத்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து மேலும் 7  நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்! அரசு மருத்துவமனை தகவல் | Public  App

இதில் கணேசனின் இடது கையில் மூன்று விரல்கள் துண்டானது. மேலும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதேபோல் தமிழ்வேந்தனுக்கும் தலையில் வெட்டு விழுந்ததில் மூவரும் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கணேசன் தரப்பினர் தாக்கியதாக முத்துசாமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஆத்தூர் ஊரக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web