ஒரே பள்ளியை சேர்ந்த 4 மாணவிகள் தற்கொலை முயற்சி!! சேலத்தில் பரபரப்பு!!

 
4 மா

சேலம் மாவட்டம் வாழைப்பாடி அருகே புதுப்பாளையம் அரசு ஆதிதிராவிடர் நல விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் புதுப்பாளையம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 4 மாணவிகள் தங்கி 10-ம் வகுப்பு படித்து வந்தனர். இந்த நிலையில் மாணவிகள் 4 பேரும் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை முயற்சித்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்கொலை முயற்சி

இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக விடுமுறை தினத்தையொட்டி அவர்கள் ஊருக்குச் செல்வதாக விடுதியில் கூறி விட்டு அவர்கள் நண்பர்கள் வீட்டிற்கு சென்று அங்குள்ள கோவிலுக்கு சென்றுள்ளனர். இதுகுறித்து ஆசிரியர்கள் மாணவிகளின் பெற்றோர்களுக்கு மாணவிகளை காணவில்லை என தகவல் தெரிவித்துள்ளனர். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பள்ளிக்கு வந்த நிலையில் மாணவிகளிடம் ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் கண்டித்ததாக தெரிகிறது.

இந்நிலையில் மாணவிகள் விடுதியில் வைத்திருந்த எலி பேஸ்ட்டை எடுத்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். உடனடியாக அவர்களை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் ஸ்ரீ அபினவ் நேரில் சந்தித்து மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணை மேற்கொண்டு பின்னர் அவர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கியுள்ளனர்.

சேலம்

மேலும் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மாணவிகள் தங்களை காத்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதில் ஈடுபட்டுள்ளனர். தற்போது இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் மேலும் பள்ளி மாணவிகளுக்கு தற்கொலை எண்ணம் வராத வகையில் உரிய ஆலோசனைகள் வழங்கப்படும் எனறும் தெரிவித்துள்ளார். பள்ளி மாணவிகள் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டதை தொடர்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வைரல் வீடியோ!! வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வைரல் வீடியோ!! இனி கார் சாவிய தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web