பண்ருட்டி விபத்தில் உயிரிழந்த 4 தொழிலாளர்கள்; தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்தார் முதல்வர் விஜய்!

 
நிதியுதவி

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நிகழ்ந்த கொடூர சாலை விபத்தில் உயிரிழந்த 4 ஏழைத் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நிதியுதவித் தொகையைத் தலா ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்கிட அவர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜூலை 5-ஆம் தேதி, பண்ருட்டி அருகே வழக்கம்போல் தங்களது அன்றாட வேலைக்காகச் சென்ற தொழிலாளர்கள் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானது. இந்தத் துயரச் சம்பவத்தில் சத்யா,செல்வராணி, காந்திமதி, ரவிச்சந்திரன் ஆகிய 4 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களது திடீர் மறைவு அவர்களது குடும்பத்தினரையும், அப்பகுதி மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

விபத்து மரணம் கொலை  தற்கொலை

தொழிலாளர்களின் மரணம் குறித்துத் தனது ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவு செய்துள்ள முதலமைச்சர் விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக இந்த விபத்தில் காயமடைந்த 8 பேருக்குச் சிறப்புச் சிகிச்சைகள் வழங்க உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கான இந்த நிதியுதவி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.